×

நாட்டில் முதல் முறையாக இடி, மின்னல் ஆய்வுக்கு ஒடிசாவில் தனி மையம்

புவனேஸ்வர்:  இடி மின்னலுடன் கூடிய பெருமழை பற்றி ஆ்ய்வு செய்வதற்காக ஒடிசாவில் தனி ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது.  ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ெஜனரல் மிருதுயுஞ்சய் நேற்று அளித்த பேட்டி: இடி, மின்னலுடன் கூடிய பெரும் மழைதாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புக்கள், சேதங்களை தவிர்க்கும் நோக்கத்துடன் இது பற்றி தனியாக ஆய்வு செய்வதற்காக, நாட்டில் முதல் முறையாக ஒடிசாவில் ஆராய்ச்சி சோதனை களம் அமைக்கப்பட உள்ளது. இதேபோல், போபால் அருகே பருவமழை சோதனை களம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகம், இந்திய வானிலை ஆய்வு மையம், டிஆர்டிஓ,  இஸ்ரோ ஆகியவை இணைந்து  இந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளன.

Tags : center ,country ,Odisha , For the first time in the country there is a separate center in Odisha for the study of thunder and lightning
× RELATED அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் பள்ளி...